SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இமானுவேல்சேகரன் நினைவுதினம் 4 தாலுகாக்களில் 144 தடை பள்ளிகளுக்கு விடுமுறை

9/11/2018 4:53:38 AM

சிவகங்கை, செப்.11: சிவகங்கை மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நான்கு தாலுகாக்களுக்கு மட்டும் நேற்று முதல் 144 தடை உத்தரவு, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆற்றுப்பகுதி, ரயில்வே தண்டவாள பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோயில் ஆகிய 5 தாலுகாக்களுக்கு நேற்று முதல் நாளை வரை(செப்.10 முதல் 12வரை) 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். இந்த நான்கு தாலுகாக்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற தாலுகாக்களில் சாலையோரங்களில் உள்ள பள்ளிகள், பிரச்சனைக்குரிய ஊர்களில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் முடிவெடுத்து உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளன.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 4 மணி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியே மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.
வாகனங்கள் ஏற்கனவே விதித்துள்ள பல்வேறு விதிமுறைகளின்படியே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் செக்போஸ்டிலேயே வாகனங்கள் சொந்தமானதா, வாடகை வாகனமா என ஆன்லைன் மூலம் பரிசோதனை நடக்க உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்