SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி இ.சேவை மையங்களில் சான்றிதழ் பதிவேற்றம்

9/11/2018 4:53:28 AM

சிவகங்கை, செப்.11: சிவகங்கை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அசல் சான்றிதழ்களை அரசு இ.சேவை மையங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி அரசு இ.சேவை மையம் மூலமாக நடைபெற்று வருகிறது. சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்காக விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செல்லத் தேவையில்லை. தற்போது குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்க்க அவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யும் பணி 30.08.2018 முதல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு இ.சேவை மையங்களில் நடைபெற்று வருகிறது. எனவே குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தங்களது அசல் சான்றிதழ்களை 18.09.2018க்குள் அரசு இ.சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்