SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரைகள் உடையும் அபாயம்: விவசாயிகள் புகார்

9/11/2018 4:50:21 AM

ராமநாதபுரம், செப்.11: ராமநாதபுரம் பெரிய கண்மாய் கால்வாய்கள் உடையும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.  
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், ‘‘ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை தண்ணீர் வரும் கால்வாயில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கருவேல மரங்களை அகற்றாமல் வைகை தண்ணீரை கண்மாய்க்குள்   கொண்டு வர முயற்சி செய்தால் கால்வாயின் இரு கரைகள் உடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே ராமநாதபுரம் பொதுப்பணித்துறை உடனடியாக வன்னிவயல் பாலம் முதல் 4ம் மடை வரை அனைத்து  கருவேல மரங்களையும்  அகற்றி கால்வாய்களை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்