SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீன்வளர்ச்சி கழகம் சார்பில் கடல் உணவு நடமாடும் விற்பனை மையம்

9/11/2018 4:50:11 AM

ராமநாதபுரம், செப்.11: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார். இதில் இறால் பிரியாணி, இறால் ப்ரை, மீன்  ப்ரை, மீன் குழம்பு சாப்பாடு, மீன் கட்லெட், நண்டு  சூப் ஆகிய உணவு வகைகள் கிடைக்கின்றன.
தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் சார்பாக சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இதுவரை மொத்தம் 22 கடல்மீன் உணவு நடமாடும் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் குறைந்த விலையில் தரமான கடல்மீன் உணவு வகைகளை உண்டு பயன்பெறும் வகையில் புதிதாக கடல் மீன் உணவு நடமாடும் விற்பனை மையம் நேற்று துவங்கப்பட்டது. கலெக்டர் வீரராகவராவ் விற்பனை மையத்தை துவக்கி வைத்தார். விழாவில் மீன்வளத்துறை கூடுதல்  இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன்,  தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக மேலாளர் செல்வராஜ், துணை மேலாளர் (மண்டபம்)  மாசிலாமணி உட்பட உதவி மேலாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.இந்த விற்பனை நிலையம் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்திலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் இடமான தனுஷ்கோடியில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6  மணி வரை செயல்படும். இதில் இறால் பிரியாணி, இறால் ப்ரை, மீன் ப்ரை, மீன் குழம்பு சாப்பாடு ஆகியவை தலா ரூ.70க்கும், மீன் கட்லெட், நண்டு சூப் ஆகியவை தலா ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்