SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிள்ளையார்பட்டியில் நாளை தேரோட்டம் 13ம் தேதி தீர்த்தவாரி

9/11/2018 4:50:01 AM

திருப்புத்தூர், செப்.11: திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாளை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது. 6ம் நாளான நேற்று முன்தினம் அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது.9ம் நாளான நாளை காலையில் கோயிலில் இருந்து திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மாலை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருவார். மாலை 4 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். இதில் சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டும் வடம் பிடிப்பது சிறப்பாகும். இரவு சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வருவார். 13ம் தேதி காலை கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்