SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

9/11/2018 4:49:52 AM

தொண்டி, செப்.11: தொண்டி அருகே உள்ள தினைக்காத்தான்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை லதா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வடிவேல் துவக்கி வைத்தார்.பள்ளியில் துவங்கிய பேரணி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பிளாஸ்டிக் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தும் ஆசிரியர்கள் ராமராஜன், சுரேஷ், மகமாயி எடுத்துரைத்தனர். மாணவர்கள்  பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சென்றனர். ஆசிரியர்கள் வனிதா, தனலெட்சுமி, அமுதா, வனஜா உட்பட பொதுமக்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்