SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கழிவுநீர் சங்கமமாகும் கீழக்கரை கடல் : அழிவின்பிடியில் கடல்வாழ் உயிரினங்கள்

9/11/2018 4:49:27 AM

கீழக்கரை, செப்.11: கழிவுநீர் கலப்பதால் கீழக்கரை கடல் பகுதியின் முகத்தோற்றமே மாறி வருகிறது. படிப்படியாக மீன்வளம் குறைந்து வருகிறது.
கடல்வாழ் உயிரினங்களின் ‘சொர்க்க பிரதேசம்’ என்றழைக்கப்படும் மன்னார் வளைகுடா கடல் பகுதி பல நூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. பெரும் பகுதி தென் மாவட்ட கடல் பகுதியில் உள்ளது. இங்கு பவள பாறைகள், அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் நிறைந்து காணப்படுகின்றன.  இப்பகுதியில் 21 தீவுகள் உள்ளன.  இதில் அதிகப்படியான தீவுகளை உள்ளடக்கிய கீழக்கரை பகுதி கடல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கும் கழிவுநீர்தான். கீழக்கரை நகரிலிருந்து தினந்தோறும் பல லட்சம் லிட்டருக்கு மேல் கழிவுநீர் நேரடியாக கலந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்நிலை தொடர்வதால் கீழக்கரை பகுதி கடலின் நிறம் இயற்கை தன்மையிலிருந்து மாறிவிட்டது. தற்போது கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக கடல் நீர் மாசடைந்து மீன்வளம் குறைந்து வருவதாக கடல்உயிரின ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.முன்பு கீழக்கரை பகுதி கடற்கரையோரம் ஆமைகள், சிறு நண்டுகள் வருகை இருக்கும். தற்போது எவ்வித கடல்வாழ் உயிரினங்களும் தென்படுவதில்லை. கீழக்கரை பகுதி கடலில் நாளொன்றுக்கு 2 டன்னுக்கும் மேல் மீன்கள் பிடிபட்டு வந்தது. தற்போது படிப்படியாக மீன்வளம் குறைந்து கொண்டே செல்கிறது. இதேநிலை நீடித்தால் எதிர்காலத்தில் கீழக்கரை கடல்வாழ் உயிரினங்கள் வாழ முடியாத ஆபத்தான கடல் பகுதியாக மாறும் என கடல் உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கீழக்கரையை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முஹைதீன் இப்ராஹிம் கூறுகையில், ‘‘கீழக்கரை நகரில் ஆண்டுக்கணக்கில் கழிவுநீர் கடலில் கலந்து வருகிறது. சில சமயம் குப்பை கொட்டும் தளமாகவும் இப்பகுதி கடற்கரை மாற்றப்படுகிறது. கடலில் கலக்கும் சாக்கடையை சுத்திகரித்து குடிநீராகவோ, விவசாயத்துக்கு  நீராகவோ பயன்படுத்த முடியும். இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’’ என்றார்.
கீழக்கரையை சேர்ந்த எபன் கூறுகையில், ‘‘மிக முக்கியமான தீவுகளை உள்ளடக்கியது கீழக்கரை கடல் பகுதி. ஆனால் இப்பகுதி பல ஆண்டுகளாக இப்படி மாசடைந்து வருவதை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது. நாம் இதனை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் வருங்காலத்தில் கடல்வாழ் உயிரினங்களே இப்பகுதியில் இல்லை என்ற சூழலே உருவாகும். இது குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi68bday

  வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

 • losangeleswaterlight

  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

 • vinayagarsilai

  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

 • mankutstromchina

  தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

 • tirupathififth

  திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்