SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இமானுவேல்சேகரன் குருபூஜை தடைசெய்யப்பட்ட வழித்தடத்தில் வரக்கூடாது மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

9/11/2018 4:49:17 AM

பரமக்குடி, செப்.11:  பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை செய்யப்பட்ட வழித்தடங்களில் வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் குருபூஜை நடைபெற உள்ளது. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வர அனுமதி கிடையாது. பரமக்குடி 5 முனை சாலை, ஆர்ச் பகுதி, பஸ் ஸ்டாண்டு, இமானுவேல் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்ட்ரோல் அறையில் இருந்து கண்காணிக்கவும், அசம்பாவிதங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 45 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் டாஸ்மாக் கடைகள்  அடைக்கப்பட்டன. வரும் 12ம் தேதி மாலை கடைகள் மீண்டும் திறக்கப்படும். முன்னெச்சரிக்ைக நடவடிக்கையாக பரமக்குடியில் 3,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   
     கலெக்டர் வீரராகவராவ் கூறுகையில், ‘‘நிகழ்ச்சிக்கு வருபவர்கள் செல்லும் வழித்தடங்களில் வாகன ரோந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  மாவட்டத்தில் 400 இடங்கள் பிரச்னைக்குரிய இடங்களாக ஆய்வு செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இன்று முழுவதும் பரமக்குடிக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.  பாதுகாப்பு காரணங்களுக்காக ஒவ்வொரு பஸ்ஸிலும் போலீசார் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  மாவட்டத்தில் 90 தடை செய்யப்பட்ட வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வழித்தடங்களில் அஞ்சலி செலுத்துபவர்கள் வரக்கூடாது’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்