SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தொகுதி மக்களிடம் பரபரப்பூட்டும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

9/11/2018 4:45:25 AM

மதுரை, செப் 11:இடைத்தேர்தலுக்காக திருப்பரங்குன்றம் தொகுதியில் சுவர்களில் பளிச்சிடும் சின்னங்கள், அரசியல் கட்சிகள் களம் இறங்கியது போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் பரபரப்பு எழுந்துள்ளது. தேர்தல் தேதி முடிவு செய்வதற்காக நவம்பர் 6ல் கந்தசஷ்டி தொடங்கி 13ல் சூரசம்காரம் நடைபெறுவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட நிர்வாகம் எழுதி உள்ளது.திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் 2016 நவம்பர் 22ம் தேதி நடந்து, 2 ஆண்டு இடைவெளியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் நடக்குமா? பாராளுமன்ற தேர்தலுடன் நடக்குமா? என்பதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்றால் நவம்பரில் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த தொகுதியில் நடைபெறும் முக்கிய திருவிழா தேதிகள் குறித்து தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டது. இதை தொடர்ந்து நவம்பர் 6ல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கி உச்சகட்டமாக நவம்பர் 13ல் சூரசம்ஹாரம் நடைபெற இருப்பதை சுட்டிக்காட்டி மாவட்ட நிர்வாகம் கடிதம் எழுதி உள்ளது. எனவே இடைத்தேர்தல் நடைபெற்றால் தேதி முடிவு செய்வதில் அதனை கருத்தில் கொள்ளும் என ஒரு அதிகாரி தெரிவித்தார்.நவம்பர் 6ல் தீபாவளி பண்டிகையாகும். எனவே நவம்பர் 15ம் தேதி பிறகு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.40 நாட்களுக்கு முன் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது வழக்கம். எனவே முக்கிய அரசியல் கட்சிகள் முன்கூட்டியே களம் இறங்கி ஆயத்த பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சுவர்களில் உதயசூரியன், இரட்டை இலை. குக்கர் சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. திமுக சார்பில் மாவட்ட திமுக செயலாளர்கள் மூர்த்தி எம்.எல்.ஏ. மணிமாறன் ஆகியோர் கிராமங்களில் வாக்குச்சாவடி முகவர் மற்றும் கிராம செயல்வீரர் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா ஆகியோர் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்து வருகின்றனர். இலவச பொருட்கள் வாரி இறைக்கப்படுகின்றன. அ.ம.மு.க. சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் தொகுதி மக்கள் மத்தியில் தேர்தல் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த தொகுதியின் முக்கியத்துவம் வருமாறு:-முருக கடவுளின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு என்ற சிறப்பை பெற்றது. இந்த தொகுதியில் தான் விமான நிலையம், காமராஜர் பல்கலை கழகம் அமைந்துள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் திருப்பரங்குன்றம், திருநகர், ஆர்வி.பட்டி, அவனியாபுரம், பசுமலைகளிலுள்ள 11 வார்டுகளும், திருப்பரங்குன்றம் ஒன்றியத்தை சார்ந்த விளாச்சேரி, வடிவேல்கரை, கட்டானூர், கீழகுயில்குடி, மேலகுயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தணக்கன்குளம், சிந்தாமணி, பிராக்குடி, கல்லம்பல்.ஐராதவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனையூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமாநேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாழாநேந்தல், நிலையூர், பெரியஆலங்குளம், சூரக்குளம், வலையபட்டி, செட்டியபட்டி, வலையங்குளம், பாப்பனோடை, ராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், முத்தான்குளம், பனைக்குளம், சோழங்குருணி, எலியார்பத்தி, நெடுமதுரை, கொம்பாடி, ஒத்தை ஆலங்குளம், பெரிய கூடக்கோவில், பாரைப்பத்தி, நல்லூர், நெடுங்குளம், சின்னஅனுப்பானடி உள்ளிட்ட 32 ஊராட்சிகள் இடம்
பெற்றுள்ளன.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • unassemblybaby

  முதன்முறையாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் குழந்தையுடன் பங்கேற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்!

 • tiltinghouseamerica

  அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள காற்றின் வேகத்தில் அசைந்தாடும் வீட்டின் கண்கவர் புகைப்படங்கள்

 • bridgecollapsed

  கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது

 • 25-09-2018

  25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbai_1010ganeshidole

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்