SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வத்தலக்குண்டு பள்ளியில் தூய்மை வாரவிழா நடவடிக்கை எடுக்க கோரிக்கை

9/11/2018 4:41:45 AM

வத்தலக்குண்டு, செப். 11: வத்தலக்குண்டு சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் தூய்மை வாரவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒரு வாரம் தூய்மை என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. நிறைவு நாளான நேற்று மாணவ, மாணவிகள் சார்பில் தூய்மையை வலியுறுத்தி பேரணி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனர். தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஷீபா தலைமை வகிக்க, மாணவி துர்கா வரவேற்றார். தமிழ்நாடு அரசு சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் நிர்மலா பேசுகையில், ‘‘மாணவர்கள் கெமிக்கல் கலந்த பாக்கெட் தின்பண்டங்களை தின்னக்கூடாது. அதனால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும்’’ என்றார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்