SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாணவியிடம் நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

9/11/2018 4:36:53 AM

சிதம்பரம், செப். 11: சிதம்பரத்தில் ஆட்டோவில் தவறவிட்ட அரை பவுன் பிரேஸ்லெட்டை மாணவியிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் பாராட்டினர்.
காரைக்கால் டி.ஆர்.பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் மாணவி பவதர்ஷினி(20). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்து வருகிறார்.
நேற்று காலை இவர் சிதம்பரம் காந்தி சிலையில் இருந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளார். அவர் கல்லூரிக்கு சென்று பார்த்த போது தான் கையில் அணிந்திருந்த அரை பவுன் பிரேஸ்லெட் காணாமால் போய் இருப்பது தெரிய வந்தது.
மாணவி பிரியதர்ஷினி உடனடியாக சிதம்பரம் காந்தி சிலை ஆட்டோ ஸ்டான்டிற்கு வந்து தான் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் தமிழன்பனை சந்தித்து இதுப்பற்றி கூறியுள்ளார். ஆட்டோ டிரைவர் தமிழன்பன் ஆட்டோவில் தேடிய போது மாணவியின் பிரேஸ்லெட் கிடந்துள்ளது. உடனடியாக ஆட்டோ டிரைவர் தமிழன்பன் அருகில் நின்றிருந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முன்னிலையில் மாணவியிடம் நகையை ஒப்படைத்தார். நேர்மையாக மாணவியிடம் நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் பாராட்டினர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

  • thirupathisixbrammorcha

    திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

  • german_trainhydro

    ஜெர்மனியில் சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு.!

  • spain_hotelaccident123

    ஸ்பெயினில் நட்சத்திர ஹோட்டல் கட்டுமானப் பணியின் போது விபத்து - ஒருவர் பலி

  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்