மின்வெட்டால் மக்கள் பாதிப்பு
9/11/2018 4:36:44 AM
குறிஞ்சிப்பாடி, செப். 11: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்(சென்னை) விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர், மாவட்ட மேற்பார்வையாளர், குறிஞ்சிப்பாடி செயற்பொறியாளர் ஆகியோருக்கு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்எல்ஏ அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிப்பேட்டை (17வது வார்டு), கன்னித்தமிழ்நாடு(18வது வார்டு),கு.நெல்லிக்குப்பம்(16வது வார்டு) ஆகிய பகுதிகள் குறிஞ்சிப்பாடி நகர பகுதிகளை ஒட்டி உள்ளது. இப்பகுதியில் இரவு, பகல் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குடிநீர் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் தங்கள் குழந்தைகளை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.
மின்வெட்டால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது. அதோடு இரவில் மின்வெட்டு நிகழ்வதால் மாணவ, மாணவிகள் படிப்பதில் சிக்கல் உண்டாகிறது.ஆகவே பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நலன் கருதி இப்பகுதிகளுக்கு நகர மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கண்டுகொள்ளாத அதிகாரிகள் ஜல்லிகள் பெயர்ந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
விபத்தில் மூதாட்டி பலி
மணல் கடத்தியவர் கைது
ரகளை வாலிபர் கைது
தவாக செயற்குழு கூட்டம்
மாசிமாத திருவிழாவில் பன்னிரு கருட சேவை
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!