SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரியில் கழிவுகளை கொட்டுவதால் நீராதாரம் பாதிக்கும் அபாயம்

9/11/2018 4:36:20 AM

சேத்தியாத்தோப்பு, செப். 11: சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தும் மினிலாரி, பெரிய லாரிகள் இயங்கி வருகிறது. சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் உள்ள செப்டிக் டேங்க் கழிவுகளை சேகரித்து அவற்றை சேத்தியாத்தோப்பில் உள்ள நீர் நிலை அருகிலும், குடியிருப்பு அருகிலும் கொட்டி வருகிறார்கள். இதனால் நீர் நிலைகள் மாசடைவதோடு, நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைகிறது. குடியிருப்புகள் பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று பகுதி, குடிநீர் ஆதாரமாக விளங்கும் வாலாஜா ஏரிப்பகுதி அருகில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டுகிறார்கள். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில்,
செப்டிக் டேங்க் கழிவுகளை ஒதுக்குபுறமாக இடங்களில் வெளியேற்ற வேண்டும். ஆனால் வாலாஜா ஏரி கரையில் கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி வயல் ஓரம் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும் என்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்