SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மறைஞான சம்பந்தர் சுவாமிகள் குருபூஜை

9/11/2018 4:35:42 AM

சிதம்பரம், செப். 11: சிதம்பரம் 1வது வார்டில் சிங்காரத்தோப்பு பகுதியில் பிரம்புரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. இப்பிரம்ம தீர்த்தம் தில்லை கூத்தப்பெருமானுக்கு உரியவனாகிய பத்து தீர்த்தங்களில் ஒன்றாகும். இந்த இடத்தில் தொன்மையான பிரம்மபுரீஸ்வரரை வசிஷ்ட முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். சந்தானச்சாரியர்களில் ஒருவரும் உமாபதி சிவத்தின் குருவாகிய மறைஞானசம்பந்தர் இக்கோயிலில் வழிபட்டு அதன் அருகிலேயே முக்தியடைந்தார்.அந்த இடத்திலேயே மறைஞான சம்பந்தருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் மட்டும் திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இக்கோயிலில் நேற்று மறைஞான சம்பந்தரின் குருபூஜை விழா நடந்தது. காலை 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகளும், ஆன்மிக சொற்பொழிவும் நடந்தது. திருவாவடுதுறை ஆதினம் அம்பலவாணத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றார்.
முன்னதாக பேராசிரியர் சிதம்பரராசன் மறைஞான சம்பந்தரின் மாண்புகள் குறித்து சொற்பொழிவாற்றினார். பின்னர் ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை தேவார பாடசாலை மாணவர்களின் திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாலையில் திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்