SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

புதுவையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

9/11/2018 4:06:55 AM

புதுச்சேரி, செப். 11:  பெட்ரோல்- டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் பந்த் காரணமாக புதுவையில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. மார்க்கெட்டுகள், கடைகள் மூடப்பட்டதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் நேற்று (10ம்தேதி) பாரத் பந்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதற்கு திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, வி.சிறுத்தை, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. பிரதான தொழிற்சங்கங்களான ஐஎன்டியுசி, தொமுச, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்டவையும் முழுஅடைப்பில் பங்கேற்பதாக அறிவித்தன. பந்த்தை வெற்றிபெறச் செய்வது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகிேயார் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டமும் நடைபெற்றன.இந்த நிலையில் அறிவித்தபடி புதுவையில் பாரத் பந்த் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதன் காரணமாக 300க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஓடவில்லை. பிஆர்டிசி பேருந்துகளும், மினி பஸ்களும் இயங்கவில்லை. அவை அனைத்தும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மிக குறைந்த அளவில் தமிழக அரசு பஸ்கள் இயங்கின. சிறிதுநேரத்தில் அதுவும் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் நிலையம் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியது.நேற்று வாரத்தின் முதல்நாள் (திங்கள்) என்பதால் சென்னைக்கு ேவலைக்கு செல்ல வேண்டிய ஐடி நிறுவன இளைஞர்கள், இளம்பெண்கள் பஸ்கள் ஓடாததால் ஏமாற்றமடைந்தனர். இதனால் அதிகாலையில் ரயில் நிலையங்களில்
முண்டியடித்தனர்.இதுதவிர டெம்போக்களும், ஆட்டோக்களும் ஓடவில்லை. மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டன. வாடகை கார்கள், டூரிஸ்ட் வேன்கள், மினி லாரிகளும், லோடு கேரியர் வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் ரூ.100 கோடிக்கு மேல் அரசுக்கு வரிஇழப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

பந்த் காரணமாக புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று நடக்கவிருந்த காலாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.   அதேவேளையில் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர் சிறப்பு பேருந்துகள் ஓடாததால் சொற்ப மாணவர்களே பள்ளிக்கு வந்திருந்தனர். இதனால் ஆங்காங்கே வாய்மொழி உத்தரவாக காலதாமத விடுமுறை அறிவிப்பு வெளியானது.மேலும் குபேர் அங்காடி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளும் திறக்கப்படவில்லை. அதேவேளையில் வெளிமாநிலங்களில் இருந்து அதிகாலை  புதுச்சேரி பெரிய மார்க்கெட் வந்த லாரிகளில் சரக்குகள் உடனே இறக்கப்பட்டு அவை மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்துக்கு அனுப்பப்பட்டன.பந்தையொட்டி 5 ஆயிரம் வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் முக்கிய சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடின. ஒருசில பெட்டிக் கடைகள், மெடிக்கல்கள் மட்டுமே திறந்திருந்தன. தனியார் பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். ஆனால் அரசின் கூட்டுறவு (கான்பெட்) பெட்ரோல் பங்குகள் இயங்கின. இதேபோல் திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம்போல் இயங்கியது. ஒட்டு மொத்தத்தில் பாரத் பந்த் காரணமாக புதுவையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.அசம்பாவிதம் தடுக்க டிஐஜி சந்திரன் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்