SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்., இடதுசாரிகள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது

9/11/2018 4:06:33 AM

புதுச்சேரி,  செப். 11: பாரத் பந்தையொட்டி புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே காங்கிரசார்,  இடதுசாரிகள் மறியலில் ஈடுபட்டனர். சில இடங்களில் மாட்டு வண்டி ஓட்டி விறகு  அடுப்பில் சமைத்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆங்காங்கே  மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.புதுவையில்  பாரத் பந்த் காரணமாக நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.  அதேநேரத்தில் பந்தை அறிவித்த காங்கிரஸ் மட்டுமின்றி இடதுசாரிகள், பல்வேறு  அமைப்புகள் ஆங்காங்கே மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வில்லியனூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு  பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலையம் வந்து  மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.  இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதேபோல்  ஒவ்வொரு தொகுதிகளிலும் காங்கிரசார், மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று  கடைகளை மூடச் சொல்லி வியாபாரிகளை எச்சரித்தனர். மேட்டுப்
பாளையத்தில் கடைகளை  மூடச் சொல்லி மிரட்டிய காங்கிரசாரை போலீசார் எச்சரித்ததால்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியினர் நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில்  தனித்தனியாக புறப்பட்டு புதிய பஸ் நிலையம் வந்து மறியலில் ஈடுபட்டனர்.  கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் அமைச்சர் விசுவநாதன்,  நாரா.கலைநாதன் தலைமையில் மறியல் செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சியினர்  பெருமாள் தலைமயில் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ய  முயன்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையே  இளைஞர் காங்கிரசார் பூக்கடை ரமேஷ் தலைமையில் மீண்டும் 10 மணியளவில் பஸ்  நிலையம் வந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது  செய்தனர். இதுதவிர காங்கிரஸ் நிர்வாகிகளும் தனியாக அங்கு மறியல் செய்து  கைதாகினர். அவர்கள் அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களை மாநில காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான நமச்சிவாயம் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.மேலும் மணவெளி  தொகுதியில் காங்கிரசார் மாட்டு வண்டியை ஓட்டிவந்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது கேஸ் விலை உயர்வை எடுத்துரைக்கும் வகையில் விறகு  அடுப்பிற்கு தீமூட்டி சமைத்த மகிளா காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக  கோஷமிட்டனர்.
 இதுதவிர மார்க்சிஸ்ட் பெருமாள், மனித உரிமை நுகர்வோர்  கூட்டமைப்பு முருகானந்தம், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது உள்ளிட்ட அமைப்பு
களும் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும்  உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். பஸ் நிலைய பகுதிகளில் மட்டும்  மொத்தம் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல்  திருக்கனூர் கடைவீதி, திருபுவனை, வில்லியனூர், பாகூர், காலாப்பட்டு  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரசார், இடதுசாரிகள் போராட்டம் நடத்தி  கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது  செய்தனர். காரைக்காலிலும் காங்கிரஸ், திமுகவினர் மட்டுமின்றி இடதுசாரி களும்  தனித்தனி அணியாக மறியலில் ஈடுபட்டு கைதாகினர். அங்கும் 500க்கும்  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்