மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகள் உண்ணாவிரதம்
9/11/2018 4:04:51 AM
புதுச்சேரி, செப். 11: புதுவை மின்துறை அனைத்து சங்கங்களின் போராட்டக் குழுவினர் ஒருநபர் குழு சிபாரிசு அடிப்படையில் ஊழியர்கள் பெற்று
வரும் ஊதியத்தை மத்திய அரசிடம் அனுப்பி உறுதிபடுத்துதல் வேண்டும், பதவி உயர்வு, எம்ஏசிபி, ஏசிபி ஆகியவற்றை காலத்தோடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.அதன்படி முதல்கட்டமாக போராட்டக்குழு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும் உண்ணாவிரதம் நடைபெற்றது. உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை தாங்கினார். பொறுப்புகுழு ராஜேந்திரன், வேல்முருகன், மதிவாணன், உத்ராடம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும் செய்திகள்
மத்தியமைச்சருக்கு கவர்னர் பரபரப்பு கடிதம்
காங்கிரசார்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு
பெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி
கவர்னர் கிரண்பேடி காரைக்காலில் ஏட்டாக பணியாற்ற வேண்டும்
2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு
பிஆர்டிசி டிரைவர் மீது சரமாரி தாக்குதல்
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு
சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை
லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்
ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்