SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு

9/11/2018 3:58:20 AM

விழுப்புரம்:  பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள், லாரிகள் ஓடவில்லை. பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்றைய தினம் நாடுமுழுவதுமான முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி தமிழகத்தில் திமுக, முஸ்லிம்லீக், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்தன. அதன்படி நேற்று திட்டமிட்டவாறு போராட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் முழு அடைப்பு காரணமாக மாவட்டம் முழுவதும் 30,000 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. ஜூவல்லரி, மால்கள் திறக்கப்படவில்லை. குறைந்த அளவே தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் ஒன்றுகூட இயக்கவில்லை. அரசு பேருந்துகளும் குறைந்
தளவே இயங்கியது.விழுப்புரம் நகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாகர்ஷா வீதி, நேருஜி வீதி, திருவிக வீதியில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நகரில் ஷேர் ஆட்டோக்
களும் இயங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மெடிக்கல், பெட்டிக்கடைகள் போன்றவை திறக்கப்பட்டிருந்தன. லாரிகளும் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

திண்டிவனம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனம் நகரம்,  விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதியில் கடைகளை முழுவதும் அடைத்து வியாபாரிகள்  ஆதரவு கொடுத்தனர். ஆனால் பள்ளி, கல்லூரிகள், தனியார் பேருந்துகள்,  ஆட்டோக்கள் இயங்கியது. மயிலம், கூட்டேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் துண்டு  பிரசுரங்களை விநியோகிக்காததால் இப்பகுதி வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை  திறந்து வியாபாரத்தில் ஈடுபட துவங்கினர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட  நிர்வாகிகள் அப்பகுதியில் கூட்டணி கட்சியான திமுக எம்.எல்.ஏ., மாசிலாமணி,  முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன் ஆகியோருடன் வணிக நிறுவனங்களுக்கு சென்று  கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் கடைகள் மூடப்பட்டது. கள்ளக்குறிச்சி:     கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை முன்பு விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரமுத்து, மாவட்ட துணை தலைவர்கள் செந்தில்குமார், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் இளவரசன் வரவேற்றார். வட்டார தலைவர் கொளஞ்சியப்பன், மீனவரணி ராஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வானூர்:  திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் அரசு பேருந்துகள் வழக்கம்போல்  ஓடத்தொடங்கியது. இதனை அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர்  சேகர், நிர்வாகிகள் ராமச்சந்திரன், சகாபுதீன் உள்ளிட்டோர் திருச்சிற்றம்பலம்  கூட்ரோட்டில் அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை  ஆரோவில் போலீசார் கைது செய்தனர். இதே பகுதியில் தி.மு.க, வி.சி.க,  காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.உளுந்தூர்பேட்டை:  உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, களமருதூர், திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்கள், வர்த்த நிறுவனங்கள் மூடி இருந்தது. 400க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், மினி டெம்போ, கார், வேன் இயங்கவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. 80 சதவிகித அரசு பேருந்துகளும், ஒரு சில தனியார் பேருந்துகளும் இயங்கியது. உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக நகர செயலாளர் டேனியல்ராஜ், குருமனோ, காங்கிரஸ் குழந்தைவேல், சீனுவாசன், ஜவாத் உள்ளிட்ட 150 பேரை டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஊர்வலம்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி  மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற  ஊர்வலம் ரயில்நிலையத்தில் தொடங்கியது. திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி  எம்எல்ஏ துவக்கி வைத்தார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத்தலைவர்  சீனுவாசக்குமார் தலைமை தாங்கினார். இதில் தவாக மாவட்ட செயலாளர் குமரன்,  திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, காங்கிரஸ்  கட்சி சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தயானந்தம், நகர தலைவர்  செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, இளைஞர் காங்கிரஸ் ராம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன்  முஸ்லிம்லீக் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்