SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நெல்லையில் நாளை ஆர்ப்பாட்டம் காங்கிரசார் திரளாக பங்கேற்க வேண்டும் மாவட்ட தலைவர் பேட்டி

9/11/2018 1:28:30 AM

தென்காசி, செப். 11: நெல்லையில் நாளை நடக்கும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட தலைவர் பழனிநாடார் கேட்டுக்கொண்டார்.இது குறித்து அவர் கூறியதாவது:  ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து நாளை (12ம் தேதி) மாவட்ட தலைநகரான நெல்லை  சந்திப்பு ரயில் நிலையம் காமராஜர் சிலை அருகில் முன்னாள் எம்.பி.பீட்டர்  அல்போன்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாவட்ட தலைவர்கள்  பழனிநாடார், சங்கரபாண்டியன், சிவக்குமார் முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள்  எம்.எல்.ஏ.சுடலையாண்டி ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். அகில இந்திய  காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கண்டன உரையாற்றுகிறார்.

இதில் முன்னாள்  மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், சட்டமன்ற  உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று  பேசுகின்றனர்.  இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும்,  தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது  முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், ஜேம்ஸ், பால்துரை, மாரித்துரை, மணி,  கணேசன், காஜா, காதர்மைதீன், அண்ணாமலை, கதிரவன், மகேந்திரன் ஆகியோர்  உடனிருந்தனர்.

மூலநோயை குணப்படுத்தும் முள்ளங்கி
முள்ளங்கியை சாம்பாரில் பயன்படுத்துவதோடு பொரியல் செய்தும் உண்ணலாம். முற்றாத கிழங்குகள் உண்ணத்தகுந்தவை. முற்றியவற்றில் நார்சத்து அதிகம் இருப்பதுடன், சுவையும் குறைவாகவே இருக்கும். சிறுநீர் கழிக்கையில் உண்டாகும் எரிச்சலை தீர்க்கும். சிறுநீர் பாதையில் ஏற்படும் கல் இவற்றிற்கு முள்ளங்கி சாற்றை தினமும் ஒரு வேளையாக பதினைந்து நாட்கள் குடித்து வர உபாதை நீங்கும்.ஒரு தேக்கரண்டி முள்ளங்கி சாற்றை சமஅளவு தேனும், கல்உப்பு சிறிதளவும் கலந்து குடித்தால் வறட்டு இருமல், மார்ப்புச்சளி, கரகரப்பு குணமாகும். முள்ளங்கி இலைகளை மஞ்சள்காமாலைக்கும் பயன்படுத்தலாம். இலைகளை நசுக்கி சாறெடுத்து வடிகட்டி ருசிக்கேற்ப சர்க்கரையை சேர்த்து கொள்ளவும். தினமும் இவற்றை அரைக்கிலோ அளவு கொடுத்து வர வேண்டும். இதில் உடனடி நிவாரணம் கிடைக்கும். சிவப்புநிற முள்ளங்கியை விட வெள்ளைநிற முள்ளங்கி மருத்துவ குணத்தில் சிறந்தது. முள்ளங்கிக்கிழங்கு மூலநோய், விக்கல், வயிற்றுப்புண், காலரா நோய்களுக்கான சிகிச்சைக்கும் உதவும். முள்ளங்கி சாற்றுடன் கேரட் சாறும் சேர்த்து பருகினால் அது உடம்பில் உள்ள சளிப்படலத்தை சுத்தம் செய்யும்.

எழுத்தறிவு மகளிர் கூட்டமைப்பிற்கு
ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பெண்கள் கூட்டமைப்பிற்கு எழுத்தறிவு விருது திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். கூட்டமைப்பில் இணைந்துள்ள அனைத்து குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும்.

நிபந்தனைகள்:விண்ணப்பத்துடன் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள குழுக்களின் பட்டியல், எழுத்தறிவு பெற்றதிற்கான சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.தொடர்பு முகவரி: சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) அல்லது திட்ட அலுவலர், மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலக வளாகம், நெல்லை என்ற முகவரிக்கு நேரில் தொடர்பு கொள்ளலாம்.

தெரிஞ்சுக்கலாம் வாங்க.....!
ரயில் வரும் இடத்தை பற்றி அறிய (spot மற்றும் வண்டி எண்) என்று டைப் செய்து 139க்கு அனுப்ப வேண்டும். ரயிலில் மின்சாரம் பழுதுநீக்க (வண்டி எண்- கோச் எண்) என்று டைப் செய்து 09717630982 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். ரயில்பெட்டியில் உள்ள குறைகளை சரிசெய்ய (வண்டிஎண்- கோச்எண்) குறிப்பிட்டு 8121281212 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். இதற்கான எஸ்எம்எஸ் கட்டணம் ரூ.3 பிடித்தம் செய்யப்பட்டு தெரிவிக்கப்படும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2018

  24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்