SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

9/11/2018 1:27:47 AM

அம்பை, செப்.11: அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் கீழ தெருவை சேர்ந்தவர் தளவாய் மகன் கார்த்திக் (23). இவரும் இவரது நண்பர்களும் பொது இடத்தில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான இசக்கிப்பாண்டி (51) என்பவர் கண்டித்து போலீசில் புகார் செய்வதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரது நண்பர்களான அம்பை சுப்பிரமணியபுரம் முருகன் மகன் சுதீஷ் (20), கோயில்குளம் சிவனு மகன் மாரியப்பன் (21)  ஆகிய மூவரும் சேர்ந்து இசக்கிபாண்டியை அரிவாளால் சரமாரி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடந்த அவர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இசக்கிப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அம்பை போலீசார், மாரியப்பன், சுதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கார்த்திகை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்