SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 775 ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி ேமற்கொள்ள திட்டம் கலெக்டர் தகவல்

9/11/2018 1:19:56 AM

திருவாரூர், செப்.11: திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 775 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் ெதரிவித்துள்ளதார்.திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் 3,75,775 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. திருந்திய நெல் சாகுபடி செய்வதன் மூலம் விதையின் அளவு மற்றும் நீரின் அளவு குறைக்கப்படுகிறது.தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் அல்லது வீரிய ஒட்டு ரகங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதைகள் பொதுமானதாகும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் (200 கிராம்), பாஸ்போ பாக்டீரியம் உயிர் உரத்துடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு சென்ட் (40 சமீ) நாற்றாங்கால் போதுமானது.  நடவு வயலை துல்லியமாக சமன் செய்து தயாரித்து பின்பு இளம் வயது (14 நாட்கள்) நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும் ஒரு குத்துக்கு ஒரு நாற்று என்ற அளவில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த 15 ஆம் நாள் களை கருவி (கோனோரீடர்)மூலம் களைகளை சேற்றில் அமுக்கி விட வேண்டும். இதனால் மண்ணில் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு வேரின் வளர்ச்சி மிகுந்து தூர்கட்டும் திறன் கூடுகிறது. நெல் வயலுக்கு தொடர்ந்து தண்ணீர் தேங்குவதை தவிர்த்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்ச வேண்டும். இதனால் முப்பது முதல் நாற்பது சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மூலம் சரசாரியாக 6 முதல் 7.5 டன் வரை கூடுதலாக மகசூல் பெற முடியும்.  இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூடுதல் மகசூல்; பெறலாம் இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்