SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூரில் மக்கள்குறைதீர் கூட்டம்: 112 மனுக்கள் குவிந்தன

9/11/2018 1:19:48 AM

திருவாரூர், செப்.11: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று  கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 112 மனுக்களை மக்கள் கலெக்டரிடம் அளித்தனர்.  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட காரக்கோட்டை தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் திருத்தலம் புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவியாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்திற்கான மின்னணு பரிமாற்ற ஆணையும், நீடாமங்கலம் அனுமந்தபுரம் கிராமத்திற்குட்பட்ட புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவியாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கான மின்னணு பரிமாற்ற ஆணையையும் கலெக்டர் வழங்கினார். இதில் டிஆர்ஓ; சக்திமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இருதயராஜ் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்