தென்பரை ஆவணியப்பன் கோயிலுக்கு ரூ.3 லட்சத்தில் வெண்கல குதிரை சிலை பக்தர்கள் வழங்கினர்
9/11/2018 1:19:34 AM
மன்னார்குடி,செப்.11: தென்பரை கிராமத்தில் உள்ள ஆவணியப்பன் கோயிலுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் முழுஉருவ வெண்கல குதிரை சிலை பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கினர். கோட்டூர் ஒன்றியம் தென்பரை கிராமத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தென்பரை ஆவணியப்பன் கோயில் உள்ளது. 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இக்கோயிலை மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இக்கோயிலில் ஒரு வாரம் நடைபெறும் சித்திரை பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஆவணியப்பனை வழிபடுவார்கள். மேலும் இக்கோயிலுக்கு ஏராளமானோர் நேர்த்தி கடன்கள் செய்வது வழக்கம்.
இந்நிலையில் தென்பரை ஆவணியப்பன் கோயிலுக்கு சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான வெண்கல குதிரை சிலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அச்சிலை முழுவதும் வெண்கலத்திலான ஆறடி உயரமும் ஐந்தடி நீளமும் கொண்ட பிரமிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது.இந்நிகழ்ச்சியில், திண்டிவனத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம், தேவசேனா, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆவணி, ராஜகோபால், திருப்பணி குழு பொறுப்பாளர்கள் நாராயணசாமி, வினோதன், தமிழ்செல்வம், கிராம கமிட்டி தலைவர்கள் மாரியப்பன், தங்கராசு, ராஜேந்திரன் மற்றும் தென்பரை கிராமவாசிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுப்பிரமணியன், ராக.பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
உப்பூரில் இன்று மக்கள் நூதன போராட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் 2 நாட்கள் நடக்கிறது
பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி துவக்க விழா 3 அமைச்சர்கள் பங்கேற்பு
கால்நடைபராமரிப்பு உதவியாளர் பணியிடம்: நேர்காணல் ரத்து