SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாய சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் 68 பேர் கைது

9/11/2018 1:19:27 AM

திருவாரூர்,செப்.11: திருவாரூர் மாவட்ட விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் கடைமடை வரை தண்ணீர் திறந்துவிடாமல் புறக்கணித்த தமிழக அரசை கண்டித்து அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் திருவாரூர் பேரூந்து நிலையம் எதிரில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு விச மாநில துணை செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். விச மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, திமுக விவசாய அணி அமைப்பாளர் தேசபந்து, காங்கிரஸ்  விவசாயபிரிவு நிர்வாகி மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கடும் வறட்சியால் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வரும் டெல்டா விவசாயிகளின் சம்பா பயிரை பாதுகாக்கவும், நடப்பாண்டு மகசூலையாவது உறுதி செய்திடவும் தேவையான அளவு தண்ணீரை கடை மடை வரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 68 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்