SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே மெஷின் வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ேகாரிக்கை

9/11/2018 1:19:19 AM

திருத்துறைப்பூண்டி, செப்.11: திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநகர செயலாளர் ரகுராமன் திருவாரூர் கலெக்டர் மற்றும் மாவட்டஇணைஇயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
திருத்துறைப்பூண்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே மெஷின் மிகவும் பழுதடைந்த நிலையிலுள்ளது. தினந்தோறும் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் நோயாளிகள்என மருத்துவம் பார்க்க வருகின்றனர்.இந்நிலையில் அரசு தலைமை மருத்துவமனை துவங்கப்பட்டநாளில் எக்ஸ்ரே மெஷின் நிறுவப்பட்டு கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தஒரெ மெஷின் தான் செயல்பட்டு வருகிறது.

இதனால் இது மிகவும் பழுதடைந்து செயல்பாடற்ற நிலையிலுள்ளது.தற்போது நவீனஎக்ஸ்ரே மெஷின்கள் வந்துவிட்டநிலையில் பழைய நடைமுறையை கடைபிடிப்பது நோயாளிகளை பாதிப்படைய செய்துள்ளது. மேலும் நோயாளிகளுக்கு துல்லியமான படம் எடுத்து மருத்துவம் பார்க்க இயலவில்லை. இதனால் நோயாளிகளுக்கு உடனடியாக வைத்தியம் பார்க்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே மெஷின் நிறுவ நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும். என அதில் அவர்  ெதரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்