SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்க அளவிடும் பணி

9/11/2018 1:19:08 AM

திருவாரூர்,செப்.11: திருவாரூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில்,  மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு செயற்கை கை, கால், மற்றும் இடுப்புக்கு கீழ்பகுதியை தாங்கும் உபகரணங்களை வழங்குவதற்காக மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உபகரணங்கள் அளவிடும் பணி நேற்று நடைபெற்றது.

மத்திய அரசு  நிறுவனமான பெங்களூரை சேர்ந்த அலிம்கோ நிறுவனத்தின் வல்லுநர்கள் குழுவினர் இந்த அளவிடும் பணியை மேற்கொண்டனர்.  இதற்காக திருவாரூர் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு தகுதியுள்ள 31 மாற்றுத் திறன் குழந்தைகள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உபகரணங்களை செய்வதற்கு அளவெடுக்கப்பட்டது.  இதில் திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, உதவி திட்ட அலுவலர் கலைவாணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கர்.பாலசுப்பிரமணியன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தா, மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்