SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவரையும் கோயில்களில் பணியமர்த்த வேண்டும் மன்னார்குடியில் கி. வீரமணி பேச்சு

9/11/2018 1:19:02 AM

மன்னார்குடி,செப்.11: அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் மன்னார்குடி பந்தலடியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் துணைத்தலைவர் ராஜகிரி தங்கராசு தலைமை வகித்தார். திக பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், தஞ்சை மண்டல தலைவர் ஜெயராமன் மாநில விவசாய தொழிலாளராணி செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக திக மாவட்ட தலைவர் சித்தார்த்தன் வரவேற்றார்.  திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பேசுகையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென  மன்னார்குடியில் தான்  முதலில் தீர்மானம் போட்டு இதே ஊரில் தான் போராட்டம் நடைபெறும் என  பெரியார் அறிவித்திருந்தார்.  அதே ஊரில் வெற்றி விழா நடைபெறுவது பொருத்தமானது. வெறும் வெற்றி விழா மட்டுமல்ல அடுத்த போராட்ட களத்துக்கான அச்சார விழாவாக நடைபெறுகிறது.பெரியாரின் குருகுலத்தில் படித்த பயிற்சியின் விளைவாகவே கருணாநிதி 1970 ல்  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென சட்டம் இயற்றினார். பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின் பற்றப்படும் என அறிவித்தார். ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் தமிழகம் பெரியார் மண் என்பது தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டே வந்துள்ளதுமறைந்த கருணாநிதி கொண்டு வந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்  சட்டத்தின் அடிப்படையில் அண்மையில் மதுரையில் ஒருவர் கோயிலில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டிருப்பது வரலாற்று சாதனை யாகும்.

தமிழகத்தில் இதுவரை 207 பேர் அர்ச்சகர் பயிற்சியை முடித்து விட்டு வேலை கிடைக்காமல் உள்ளனர். அவர்களில் சிலர் இறந்தும் விட்டனர். அப்படி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்து அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். மேலும் அர்ச்சகர் பயிற்சி முடித்த அனைவரையும் தமிழக அரசு உடனடியாக கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய வேண்டும். மேலும் கோயில்களில் பெண்களையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வீரமணி பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,  திமுக மாநில  தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, மதிமுக மாவட்ட செயலாளர்  பாலச்சந்திரன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கனகவேல், மார்க்சிய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு தமிழ்மணி, விசி மாநில விவசாய அணி துணை செயலாளர் முருகையன், திக  மாநில பேச்சாளர் மேலவாசல் ராம அன்பழகன் ஆகியோர்  பேசினர். முடிவில் நகர தலைவர் அன்பழகன் நன்றி கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pulwama_kashmirthakuthal11

  காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு

 • rafael_porvimanm1

  சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை

 • fruitsvegpala1

  லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

 • france_leaders123

  ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு

 • 19-02-2019

  19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்