SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன்னார்குடியில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி

9/11/2018 1:18:51 AM

மன்னார்குடி, செப்.11: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மன்னார்குடியில் நடைபெற்ற  விழிப்புணர்வு பேரணியை  டிஎஸ்பி அசோகன் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம் மற்றும் உலக சுகாதார மையம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2003ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும்  செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் நோக்கில் செரிஸ் உளவியல் ஆலோசனை மையம், ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி என்எஸ்எஸ் மற்றும் என்சிசி மாணவர்கள் இணைந்து உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மன்னார்குடியில் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

முன்னதாக மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அருகில் இருந்து துவங்கியை பேரணியை டிஎஸ்பி அசோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணிகள் ஏற்பாடுகளை செரிஸ் உளவியல் ஆலோசனை மையம்சார்பில் பிரகாஷ் செய்திருந்தார். பேரணிக்கு கல்லூரி முதல்வர்  சித்ர கலாராணி தலைமை வகித்தார். கல்லூரியின் வேதியியல் துறைத்தலைவர் ரவி முன்னிலை வகித்தார். பேரணி முக்கிய கடைவீதி வழியாக சென்று அரசுக்கல்லூரி முன்பு நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் தற்கொலை தடுப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் பிடித்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்