SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பெட்ரோல், டீசல் உயர்வு கண்டித்து திருவாரூர், முத்துப்பேட்டை மன்னார்குடியில் கடையடைப்பு-மறியல்

9/11/2018 1:18:44 AM

திருவாரூர்,செப்.11: திருவாரூர்மாவட்டம் முழுவதும் பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நடத்திய  நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது..திருவாரூர்பஸ் ஸ்டாண்டில் காங்கிரஸ் மாவட்ட  துணைதலைவர்பாலாஜி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.கொரடாச்சேரியில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரைவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கேசவராஜ் ஆகியோர்தலைமையில் வெட்டாற்று பாலம் அருகே நடந்த மறியல் போராட்டத்தில் 150 பேர் கைது செயப்பட்டனர்.பேரளத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர்ஆனந்த், காங்கிரஸ் ஜெயக்குமார்தலைமையில் மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 100 பேர்கைது செய்யப்பட்டனர். நன்னிலத்தில்  185 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.குடவாசலில் காங்கிரஸ் வட்டார தலைவர்முனிஅய்யா, நகர நிர்வாகிகள் ரவி, செந்தில் ஆகியோர் தலைமையில் பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மாற்று கட்சியினர்ஆதரவோடு கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடந்தது.

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் திருத்துறைப்பூண்டி சாலை, பட்டுக்கோட்டை சாலை மன்னார்குடி சாலை, பெரியக்கடைதெரு பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. உதயமார்த்தாண்டபுரம், நாச்சிக்குளம், ஆலங்காடு, எடையூர், சங்கேந்தி, பாண்டி ஆகிய பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. முத்துப்பேட்டை பழைய பேரூந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் காங்கிரஸ் வட்டார தலைவர்பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மறியலில் ஈடுபட்ட திமுக மாநில விவசாய பிரிவு செயலாளர் முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன், திமுக ஒன்றிய செயலாளர்மனோகரன், நகர செயலாளர்எம்.எஸ்.கார்த்திக், காங்கிரஸ் நகர தலைவர்ஜெகபர்அலி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்முருகையன் உள்பட அனைத்து கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரத்தில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர்பாலசுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்வீரசேகரன், பல்வேறு கட்சியை சேர்ந்த  20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த பாண்டியில் நடந்த சாலை மறியலில் விவசாயி பிரிவு ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், வீரமணி, மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர்கே.வி.ராஜேந்திரன் உட்பட  50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் விலைஉயர்வை கண்டித்து சாலை மறியல் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
சாலை மறியலில் ஈடுபட்ட இந்தியகம்யூனிஸ்ட் கட்சி முன்னாள்எம்.எல்.ஏஉலகநாதன், திமுகநகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநில குழு உறுப்பினர் நாகராஜன், நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், காங்கிரஸ்நகரதலைவர் எழிலரசன், மாவட்ட செயலாளர் ரமேஷ், தமிழ் மாநிலகாங்கிரஸ்நகரதலைவர் கோவிந்தசாமி,, தி.க. நகரதலைவர் குணசேகரன், மதிமுகநகர செயலாளர் கோவி சேகர், விடுதலை சிறுத்தைகள்கட்சிநகர செயலாளர் ஜான்மைக்கேல் உள்ளிட்ட 300 பேரை திருத்துறைப்பூண்டி போலீசார் கைது செய்தனர். சாலை மறியலினால் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, வேதாரண்யம், பட்டுக்கோட்டை சாலைகளில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒன்றிய நகரபகுதிகளில் கடைகள்எல்லாம் அடைக்கப்பட்டிருந்தது.

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தது,  ஆட்டோக்கள், டாக்சி, 500 க்கும் மேற்பட்ட  லாரி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை, பயணிகள் இல்லாமல் ஒரு சில அரசு பேருந்துகள் மட்டும் இயங்கியது, பின்னர் அனைத்து கட்சி தலைவர்களும் பெரியார் சிலையிலிருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு மன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் இதிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம், திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஒரத்தநாடு ராஜணிக்கம், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கனகவேல், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தலையா மங்கலம் பாலு ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த வர்கள்  மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும்   சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 250 க்கும் மேற்பட்டவர்களை மன்னார்குடி டிஎஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர் மணிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.  
இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாககுழு உறுப்பினர் செல்வராஜ், மதிமுக  செயலாளர் பாலச்சந்திரன், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோட்டூர்: கோட்டூரில்  அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தது,  ஆட்டோக்கள், டாக்சி, லாரி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. கோட்டூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பால ஞானவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சண்முகவேல், விசி ஒன்றிய செயலாளர் முருகையன் ஆகியோர் தலைமையில் சுமார் 700 க்கும் மேற்பட்டோர் கோட்டூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந் தனர். நீடாமங்கலம்: பெட்ரோல் விலை உயர்வால் மத்திய மாநில அரசை கண்டித்து நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் அனைத்து கட்சி சார்பில் நடந்த சாலைமறியலுக்கு  காங்கிரஸ் மாவட்ட விவசாயி அணி சோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீரமணி,ஒன்றிய செயலாளர்கள்   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழார்வன்,மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி ராஜமாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொறுப்பாளர் ராதா,மதிமுக தியாகராஜன் டிகேவி பேரவை பாபு .காங்கிரஸ் நகர செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு சாலைமறியல் செய்தனர் இதில் ஒரு பெண் உள்ளிட்ட 70 பேரை நீடாமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
  கூத்தாநல்லூர் தபால் அலுவலகம் முன் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திமுக மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் மாவட்ட பிரதிநிதி செல்வம்,கூத்தாநல்லுர் நகர செயலாளர் காதர்உசேன்,காங்கிரஸ் நகர தலைவர் சாம்பசிவம்,வர்த்தகர் சங்கம் ரவிச்சந்திரன் உள்ளிட்ட மமக,விசி,முஸ்லம் லீக் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லெட்சுமாங்குடி பாலம் அருகில் நகர செயலாளர் சுதர்சன் தலைமையில் சாலை மறியல் நடந்தது.30பேரை கூத்தாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.வலங்கைமான்: வலங்கைமான் கடைவீதியில் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் தலைமையிலும், வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, தி.மு.க நகர செயலாளர் சிவநேசன், காங்கிரஸ் நகரதலைவர் ராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆலங்குடியில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் அரை மணிநேரம்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சி.பி.எம் கட்சியின் மாவட்டக்குழு சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ராதா,  உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை வலங்கைமான் போலீசார் கைதுசெய்து திருமண மண்டபத்தில் வைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

  • thirupathisixbrammorcha

    திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

  • german_trainhydro

    ஜெர்மனியில் சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு.!

  • spain_hotelaccident123

    ஸ்பெயினில் நட்சத்திர ஹோட்டல் கட்டுமானப் பணியின் போது விபத்து - ஒருவர் பலி

  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்