திருமயம் பஸ்ஸ்டாண்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைத்த கொட்டகை அகற்றம்
9/11/2018 1:15:46 AM
திருமயம், செப்.11: திருமயம் பஸ்ஸ்டாண்ட் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கொட்டகை அகற்றப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பஸ்ஸ்டாண்ட் அருகேக் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் ஓரம் 1,500 சதுர அடியில் காலியிடம் இருந்தது. இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இரும்பு கம்பிகள் கொண்ட கொட்டகை அமைத்தார். இதுகுறித்து திருமயம் தாசில்தார் ரமேஷிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க தாசில்தார் உத்தவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா சர்வேயர் சிதம்பரம், ஆர்ஐ கோகிலா, விஏஓ பூமிநாதன் ஆகியோர் திருமயம் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றி கொள்ளப்பட்டது.
மேலும் செய்திகள்
விடாமுயற்சி இருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம் கலெக்டர் பேச்சு
கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு நீதிமன்றம் உத்தரவு
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் போராட்டத்தில் பங்கேற்ற 7 ஆசிரியர்கள் நிபந்தனையுடன் மீண்டும் பணியில் சேர்ப்பு
பொன்னமராவதி அருகே வாக்குப்பதிவு இயந்திரம் மாதிரி செயல் விளக்கம்
அறந்தாங்கியில் நெல் அறுவடை தீவிரம் எள், உளுந்து சாகுபடிக்கு மானிய விலையில் விதைகள் விவசாயிகள் எதிர்பார்ப்பு
கஜாபுயலில் சாய்ந்த மின்கம்பங்களால் பயிர்கள் பாதிப்பு புதிய கம்பங்கள் நட்டு உடனே மின் சப்ளை
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி