SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார் மோதி தொழிலாளி பலி

9/11/2018 1:14:10 AM

மணமேல்குடி, செப்.11: மணமேல்குடி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாய தொழிலாளி பலியானார்.  மணமேல்குடி அடுத்த கிருஷ்ணாஜிபட்டினத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி ராஜா (52). இவர் நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக கிருஷ்ணாஜிபட்டினம் கடைவீதிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா பலியானார். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுமதியின்றி மது விற்றவர் கைது: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஊரணிபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (45). இவர் ஊரணிபுரம் திருமணம் மண்டபம் எதிரே அனுமதியின்றி மதுபானம் விற்பதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி கறம்பக்குடி எஸ்ஐ மாரியப்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முருகானந்தம் அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து முருகானந்தத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்