SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறந்தாங்கி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

9/11/2018 1:13:40 AM

புதுக்கோட்டை, செப்.11: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அறந்தாங்கி வேங்கூர், பெருங்காடு ஆதிதிராவிடர் மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் அறந்தாங்கி வேங்கூர், பெருங்காடு ஆதிதிராவிடர் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் வசிக்கும் பகுதியில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இந்த பகுதியில் பள்ளிகள் உள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். இந்நிலையில் நாங்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக டாஸ்மாக் திறக்க ஏற்பாடுகள் நடத்து வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்