SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

புதுக்கோட்டையில் தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது

9/11/2018 1:13:32 AM

புதுக்கோட்டை, செப்.11: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று (11ம்தேதி) காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்ற உள்ளது. இதுகுறித்து தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பெரியண்ணன் மாளிகையில் உள்ள கீரைதமிழ்செல்வன் அவைக்கூட்டத்தில் அவைத் தலைவர் பொன்துரை தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக அரசின் அவலங்களை கண்டித்து செப்டம்பர் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்