SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு, சாலை மறியல்

9/11/2018 1:13:25 AM

புதுக்கோட்டை, செப்.11: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியனர் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந் ததால் சாலைகள் வெறிச்சோடியது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் நேற்று பந்த் நடைபெற்றது. இந்த பந்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. மேலும் இந்த போராட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் ஆதரவு தெரிவித்திருந்தது. இதன்படி நேற்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைலயம், பழைய பேருந்து நிலையம், கீழராஜவீதி, மேலராஜவீதி, பிருந்தாவனம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. நேற்று காலை புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக, காங்கிரஸ் கட்சியினர் இணைந்து இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பெரியண்ணன் அரசு தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முருகேசன், திமுக நகர செயலாளர் னைநாமுகமது, காங்கிரஸ் நகர தலைவர் இப்ராஹீம் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கீரனூரில் நடந்த போராட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமை வகித்தார்.

இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்ளை எழுப்பினார். இந்த போராட்டத்தில் கீரனூர் நகர செயலாளர் அண்ணாதுரை, லெட்சுமணன்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுப்புராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், வாசுதேவன், சப் இன்ஸ்பெக்டர் விவேக் உள்ளிட்ட போலீசார் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காலை நேரத்தில் அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்ததால் உணவு கிடைக்காமல் சிலர் அவதியுற்றனர். அறந்தாங்கி: அறந்தாங்கி பேருந்து நிலையம் முன் அனைத்து கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 80 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் ஆவுடையார்கோவிலில் மறியலில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவுடையார்கோவிலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.பொன்னமராவதி: பொன்னமராவதி காந்தி நிலையில் இருந்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்று பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் பக்ருதீன், ஒன்றியக்குழு உறுப்பினரகள் ராமசாமி, பிரதாப்சிங், தீன், குமார் மற்றும் 21 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.பொன்னமராவதி பேருந்து நிலையம் முன் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், நகர தலைவர் பழனியப்பன், திமுக ஒன்றிய செயலாளர்கள் அடைக்கலமணி, முத்து, நகர செயலாளர் அழகப்பன், ஒன்றிய பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட துணை செயலாளர் சின்னையா,  காங்கிரஸ் நிர்வாகி ஜீவானந்தம், சோலையப்பன், கிரிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொன்னமராவதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

ஆலங்குடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் கூடினர். அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சொர்ணகுமார் தலைமையில் பேரணியாக சென்று வடகாடு முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட திமுக ஒன்றிய செயலாளர் தங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வடிவேல், காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சகாயராஜ் உட்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலுப்பூர்: விராலிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் மறியல் செய்ய முயன்றபோது 15 பேர் கைது செய்யப்பட்டனர். அன்னவாசல் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 21 பேர் கடைவீதியில் மறியலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டனர். கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. வெள்ளை முனியன் கோயில் திடலில் இருந்து பேரணியாக வந்து பேருந்து நிலையம் முன் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜேந்திரன், அரசப்பன், நாகராஜன், அம்பிகாபதி, அமுல்ராஜ், கலியபெருமாள், புஷ்பம், விமலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேர்ந்த ராமையன், ரத்தினவேல், சித்திரைவேல், இளையராஜா, பன்னீர்செல்வம் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆசைத்தம்பி, வளத்தான், சோதிவேல், ராஜாங்கம் உள்ளிட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.கறம்பக்குடி: கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.மணமேல்குடி: மணமேல்குடி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்