SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர் நிலைகளில் விநாயகர் சிலை கரைக்கும் வழிமுறை கரூர் கலெக்டர் அறிவிப்பு

9/11/2018 12:47:06 AM

கரூர், செப். 11:  விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு, குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  களிமண்ணால் செய்த, சுடப்படாததும், எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

 நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. ஏரிகளிலும் மற்ற நீர்நிலைகளிலும் விநாயகர் சிலைகளை கரைக்காமல் மாவட்ட நிர்வாகத்தினால் சிலைகளை கரைப்பதற்கு கண்டறியப்பட்டுள்ள இடங்களான காவிரியாற்றின் கரையில் உள்ள தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனூர், குளித்தலை கடம்பர்கோயில் அருகிலும், அமராவதி ஆற்றில் அரவக்குறிச்சி ராஜபுரம் ஆகிய இடங்களில் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்காத வண்ணம் அவற்றில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.
இவ்வாறு விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்