SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக தற்கொலை தடுப்பு தினம் அரசு கல்லூரி என்சிசி மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

9/11/2018 12:46:57 AM

கரூர், செப். 11: உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி கரூர் அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கரூர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த 7வது கம்பெனி 2ம் தமிழ்நாடு பட்டாலியன் கம்பெனி கமாண்டோ லெப்டினன்ட் விநாயகம் தலைமையில் 76 என்சிசி மாணவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் இருந்து துவங்கிய இந்த பேரணி சணப்பிரட்டி, புலியூர், உப்பிடமங்கலம், சேங்கல், பஞ்சப்பட்டி வழியாக அய்யர்மலை வரை 120 கிமீ தூரம் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர்.முன்னதாக பேரணியை தேர்வு நெறியாளர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஷ்வரன் மற்றும் 2வது தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டர் ஜபின் மேத்யூ ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்