SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளியணை குளத்துக்கு காவிரி உபரி நீரை திருப்ப நடவடிக்கை விவசாயிகள் எதிர்பார்ப்பு

9/11/2018 12:46:42 AM

கரூர், செப். 11: காவிரி உபரி நீரை வெள்ளியணை குளத்துக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம் வெள்ளியணையில் பாசனக்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. தொடர்ந்து வறட்சி மழையின்மை காரணமாக மக்கள் குடிநீருக்கே சிரமப்படுகின்றனர். காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே காவிரியில் வெள்ளநீர் வரும்போது குளத்திற்கு தண்ணீர் நிரப்பலாம். அதற்கான திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெள்ளியணை பெரியகுளத்திற்கு குடகனாற்றில் இருந்து தண்ணீர் வரும். கடந்த 5 ஆண்டுகளாக மழையின்மை காரணமாக குளத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. பிற பகுதிகளில் மழைபெய்தும் குடகனாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் மாவட்ட எல்லையிலும் குடகனாறு அணை இருக்கிறது. காவிரியில் உபரிநீர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு எங்கள் ஊர்வழியாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்கின்றனர். அப்படியிருக்கும்போது வெள்ளியணைக்கு தண்ணீரை கொண்டுவர திட்டம் செயல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். காவிரியாற்றில் இருந்து 17 கிமீ தூரத்தில் உள்ளது வெள்ளியணை பெரியகுளம்.
ராட்சத குழாய்களை அமைத்து உபரிநீர் வரும் காலங்களில் நீர்உந்து செய்யப்பட்டு குளத்தை அடையுமாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குடகனாறு அணையில் இருந்து வெள்ளியணை 15 கிமீ தூரத்தில்உள்ளது. மாயனூர் 17 கிமீ தூரத்தில்உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பாசனத்திற்கும் நீர் கிடைக்கும். நீராதாரமும் பெருகும். கலெக்டர் குளத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்டத்தை செயல்படுத்தினால் 450 ஏக்கர் பரப்பரளவு வேளாண் நிலங்கள் பயனடையும். 10 ஆயிரம் விவசாய குடும்பத்தினர் பயனடைவார்கள். வெள்ளியணை, ஜெகதாபி, பொரணி, உப்பிடமங்கலம், சேங்கல், காணியாளம்பட்டி, பஞ்சப்பட்டி, வடகம்பாடி, முத்தம்பட்டி, குமாரபாளையம்,.செல்லாண்டிபட்டி, மணவாடி, கத்தாளப்பட்டி போன்ற ஊர்கள் உள்ளிட்ட அய்யர்மலை விவசாயிகள் பயனடைவார்கள். வீணாக கடலில் கலக்கும் நீரை பயன்படுத்த திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்