கரூரில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி ஏராளமானவர்கள் பங்கேற்பு
9/11/2018 12:46:02 AM
கரூர், செப். 11: கரூரில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கரூர் மாவட்ட யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பெரியவர்கள், பெண்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான சேம்பியன்ஷிப் போட்டிகளில் எல்கேஜி, யூகேஜி, 5 வயதுக்குகீழ், 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 வயது தனிப்பிரிவு, 17 முதல் 20 வயது வரை, 21 முதல் 25 வயது வரை, 26 முதல் 35 வயது வரை, 35 வயது அதற்கு மேல் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மாநில அணி தேர்வு போட்டிகளும் நடைபெற்றன. மாவட்ட மாநில அளவில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு புதுடெல்லியில் வரும் நவம்பர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறும் நேஷனல் யோகா ஸ்போர்ட்சில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. போட்டிகளை சிவயோகி சிவஷண்முகம் குருஜி தலைமையில் நிர்வாகிகள் நடத்தினர்.
மேலும் செய்திகள்
கரூர் ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்
கரூர் ரயில் நிலையத்தில் ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
எழுநூற்றுமங்கலத்தில் மயானப்பாதை, நீர்த்தேக்க தொட்டி வசதி இன்றி அவதி திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கிராம மக்கள் குற்றச்சாட்டு
கரூர் தாந்தோணிமலை பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் மக்கள் பீதி
தாந்தோணிமலை பிரதான கடைவீதியில் தடுப்பு சுவரால் பொதுமக்கள் கடும் அவதி
கரூர் பகுதியில் மயில்களிடம் இருந்து பாதுகாக்க வயலை சுற்றிலும் வேலி அமைக்கும் விவசாயிகள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு