SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

9/11/2018 12:45:52 AM

கரூர், செப். 11: கரூர் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை அரிவாளால் வெட்டிய விவசாயிக்கு கரூர் முதன்மை நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள வீரியப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி(55). இதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி(48). இருவருக்கும் இடையே  பொதுவான கிணற்றில் இருந்து நீர் பாய்ச்சுவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது.இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி அன்று, ராமசாமி, காளையப்பட்டியில் உள்ள தனது நிலத்தில் நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்த போது, கருப்பசாமி தனது மகனுடன் சென்று, ராமசாமியை அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். காமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார்.இந்த சம்பவம் சம்பந்தமாக வெள்ளியணை போலீசார், கொலை முயற்சி செய்ய முயன்றதாக இருவர் மீதும் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு கரூர் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கருப்பசாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.மேலும், கருப்புசாமியின் மகன், இளையவர் என்பதால், அவர் மீதான விசாரனை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்