SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளிடம் அருகே ரயில் மோதி கொத்தனார் பலி

9/11/2018 12:45:43 AM

கொள்ளிடம், செப். 11: கொள்ளிடம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி கொத்தனார் பலியானார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை வைரவனிருப்பு ஏரி பகுதியை சேர்ந்த கொத்தனார் சகாயராஜ் (34). இவர் நேற்று அதிகாலை திருமைலாடி ரயில்வே கேட் அருகே ரயில் பாதையில் நடந்து சென்றார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் பாசஞ்சர் ரயில் சகாயராஜ் மீது மோதியது. இதில் கால் துண்டாகி சம்பவ இடத்திலேயே சகாயராஜ் பலியானார். மயிலாடுதுறை ரயில்வே சப்இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சகாயராஜ் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்