SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆன்லைன் வர்த்தகத்தை முற்றிலும் தடை செய்யக்கோரி போராட்டம் கரூர் மருந்து வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழுவில் முடிவு

9/11/2018 12:45:36 AM

கரூர், செப். 11: ஆன் லைன் மருந்து வணிகத்தை முற்றிலுமாக தடை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்த வணிகர்கள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்ம் நேற்று கரூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன், மாநில செயலாளரும், அகில இந்திய மருந்து வணிகர் சங்கத்தின் பொருளாளருமான செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றகர். நிர்வாகிகள் ஜெயகுமார், பாலமுருகன், தமிழச்செம்மல், மேலை பழனியப்பன் பேசினர். புதிய தலைவராக விமலா திருஞானம், ஜெயக்குமார், பாலு, நடராஜா வள்ளியப்பன், சேகர், முத்துசாமி, ரவி, ஜெய்னுலாபுதீன் உளளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் மாநில செயலாளரும், அகில அந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளருமான செல்வன் நிருபர்களிடம் கூறியது:உலகில் உள்ள எல்லா வணிகங்களும் ஒரு ஆண்டு அதிகமாகும் மற்றொரு ஆண்டு குறையும். ஆனால் மருந்து வணிகம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 சதவீதம் கூடுகிற வணிகம். ஆன்லைன் மருந்து வணிகத்தை ஏன் எதிர்க்கிறோம் என்றால் அதன் மூலம் தூ க்க மாத்திரை, கருக்கலைப்பு, ஆண்மை ஊக்கி, மாத்திரை கட்டுப்பாடின்றி விற்கப்பட்டு நம் பண்பாடு கலாச்சாரம், சீரழியும் என்பதால்தான். அரசின் சட்டதிட்ட விதிமுறைகளைப் பின்பற்றி மருந்து வணிகம் செய்கிறோம். வணிகம் நிலைக்க தேவையற்ற புதிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் அரசும் துறைகளும் துணை புரிய வேண்டும் விரைவில் திருச்சியில் மண்டபம் கட்டப்பட உள்ளது என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஆன்லைன் மருந்து வணிகத்தை முற்றிலுமாக தடை செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்தும், வரும் 20ம் தேதி முதல் மருந்து வணிகர்கள் கருப்பு பட்டை அணிந்து முதற்கட்டமாக எதிர்ப்பு தெரிவிப்பது. 28ம் தேதி முழுமையான கடையடைப்பு செய்வது, மருந்துக்கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் அறிவுரையின்படி இனிமேல் ரத்த சோதனை மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றை பார்ப்பதில்லை. டிபி காசநோய் சம்பந்தமான மருந்துகள், ஆக்சிடோசி போன்ற ஊசிகள், கருக்கலைப்பு மாத்திரைகள், மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பதில்லை என தீர்மானிக்கப்பட்டது.மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் அரசுடன் இணைக்கமான பேச்சுவார்த்தை நடத்தி மருந்து வணிகர்களுக்குள்ள இடையூறுகளை நீக்க பாடுபடுவது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • teslacar_won

  விபத்து சோதனையில் 5 நட்சத்திரம் பெற்ற டெஸ்லா மாடல் 3 கார்

 • damagedvinayr_idoles00

  விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

 • delhiaccid_childead

  டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

 • dogsketc_123amer

  பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

 • thailandbirdsing

  தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்