SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்.சாண்ட் மணலை கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை

9/11/2018 12:45:24 AM

சீர்காழி, செப்.11: எம்.சாண்ட் மணலை கொள்முதல் செய்து  குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சீர்காழி கட்டிட பொறியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாகை மாவட்டத்தில், சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் வீடு கட்டுபவர்கள், அப்பார்ட்மெண்ட் கட்டுபவர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கான்கீரீட் பிளாக்குகள், பாலங்கள் என அனைத்து கட்டுமானத்திற்கும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து விற்பனை செய்யப்பட்ட மணலை வாங்கி பணிகளை செய்து வந்தனர்.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுப்பது நிறுத்தப்பட்டதால் மணல் கிடைக்காமல் கட்டிட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டிட பணியில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றன. பல்வேறு இடங்களில் ஆறு, குளம், ஏரிகளில் இருந்து எடுக்கப்பட்ட மணலை ஆற்று மணல் என கூறி 1 லாரி மணல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பலர் ஆற்று மணல் என நினைத்து வாங்கி கட்டிட பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த மணலை பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டப்படுவதால் விரைவில் கட்டிடம் வலுவிழந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டு விடும். இதனை தடுக்கும் வகையில் எம்.சாண்ட் மணலை கட்டிடம் கட்டுபவர்கள் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சீர்காழி கட்டிட பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் பொறியாளர்  செல்வகுமார் கூறுகையில், நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்வதால் மணல் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
இதனை பயன்படுத்தி பலர் ஆறு, குளம், ஏரி  மணலை ஆற்று மணல் என விற்பனை செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் வாங்கி கட்டிடம் கட்டுவதை தவிர்க்க வேண்டும். ஆற்று மணலுக்கு பதிலாக 100 சதவீதம் வலிமை உறுதியான எம்.சாண்ட் மணலை பயன்படுத்தினால் சிமெண்ட் தேவை 5 முதல் 7 சதவீதம் வரை குறையும். ஆற்று மணலில் களிமண், வண்டல் மண் கலந்து வரும் இதனால் பூச்சு வேலையின்போது சுவற்றில் விரிசல் ஏற்படும். ஆனால் எம்.சாண்ட் மணலை பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் வராது. வீடு கட்டுபவர்கள் எம்.சாண்ட் மணலை வாங்கி பயன்படுத்தினால் கட்டிடம் தரம் உள்ளதாக இருக்கும். தமிழக அரசு எம்.சாண்ட் மணலை கொள்முதல் செய்து குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PuyalGaja2

  புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

 • EidEMIladunNabi

  மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

 • SidhaindaVazhkaiGaja

  கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்