SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளிடம் பகுதி நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

9/11/2018 12:45:01 AM

கொள்ளிடம், செப்.11: கொள்ளிடம் பகுதியில் உள்ள நீர்நிலைகளின் ஆகிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   கொள்ளிடம் ஒன்றியத்திலுள்ள 42 ஊராட்சிகளைச் சேர்ந்த 200 கிராமங்களில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குளங்கள் மற்றும் குட்டைகளும் 100க்கும் மேற்பட்ட கோயில் குளங்களும் இருந்தன. இதில் 350 குளங்கள் இருந்ததற்கான தடயமே இல்லாமல் உள்ளது. குளங்கள் தூர்க்கப்பட்டு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. சில குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கொட்டகையும்  வைக்கோல் போர்களும் போடப்பட்டுள்ளனர். சிலர் குளங்களை ஆக்கிரமித்து  கட்டிடங்களைக்கட்டியும் கொட்டகையையும் அமைத்துள்ளனர். இந்தக் குளங்கள்  கிராமங்களில் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவும் கிராம மக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் வெட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. இக்குளங்களினால் நிலத்தடி நீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் காலப்போக்கில் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதற்கான  தடயமே இல்லாமல் உள்ளது.

 எனவே கிராமங்கள்  தோறும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு   ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்துக்குள் புதைந்து கிடக்கும் குளங்களை பழைய முறையில் பயன்பாட்டிற்கு  கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார். இது குறித்து கலக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்