SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அரசு கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 கொடுத்தால் மட்டுமே நெல் விற்க முடிகிறது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கோரிக்கை

9/11/2018 12:44:49 AM

மயிலாடுதுறை, செப். 11: நாகை மாவட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.40 லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கு ஜூன் 12ல் காவிரியில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொண்டு நெற்பயிரிட்டு தற்போது அறுவடை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு விலைக்கு இந்தாண்டு தனியார் வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் விற்பனை செய்ய செல்லும்போது அங்கு மேலும் அதிர்ச்சி காத்திருக்கிறது.

நெல் கொள்முதல் அலுவலர் மற்றும் சுமை தூக்குவோருக்கு என்று தனியாக லஞ்சம் கேட்கின்றனர். குறிப்பாக கிலோ ஒன்றுக்கு 70 பைசா முதல் ரூ.1 வரை  வீதம் ஒரு சிப்பத்துக்கு அதாவது 40 கிலோ மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை  முன்பாகவே ரொக்கமாக கொடுத்தால் தான் நெல்லை பெற்று கொள்கிறார்கள். அப்போது அரசு தான் உங்களுக்கு சம்பளம் தருகிறதே, எங்களிடம் ஏன் இவ்வளவு கேட்கிறீர்கள் என்று விவசாயிகள் கேட்டால் மேலதிகாரிகள் முதல் அமைச்சர் வரை இதில் பங்குண்டு என்கின்றனர்.

ஒரு சில விவசாயிகள்  தரவே முடியாது என்று கூறினால் அந்த விவசாயிகளின் நெல்லை பொய்க்காரணம் கூறியும்,  ஈரப்பதம் அதிகமாக உள்ளது என்று  கூறியும் கொள்முதல் செய்யாமல் காலதாமதம் செய்யும் போக்கு அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் காண முடிகிறது. எனவே கலெக்டரும், லஞ்ச ஒழிப்புத்துறையினரும் திடீர் ஆய்வு செய்து லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மயிலாடுதுறை சமூகஆர்வலர் அப்பர் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்