SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

9/11/2018 12:44:16 AM

செம்பனார்கோவில், செப்.11:   செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற இரட்டை ஆஞ்சநேயர்கோயில் உள்ளது. இங்கு ஒரே கருவறையில் 2 ஆஞ்சநேயர் எழுந்தருளி கிழக்கு திசையில் பூம்புகார் கடற்கரையை நோக்கி அருள்பாளிப்பது சிறப்பாக போற்றப்படுகிறது.   இதனால் இங்கு வந்து வழிபடுவோருக்கு  இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பல்வேறு சிறப்புகளுடைய இந்த கோயிலில் அமாவாசையொட்டி ஆஞ்சநேயருக்கு மங்கல பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வடைமாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளைக்கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனையும், ஆராதனையும் நடந்தன. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்