SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காரைக்காலில் சாலை மறியல், கடையடைப்பு கடைகள் முழுமையாக அடைப்பு

9/11/2018 12:44:07 AM

காரைக்கால், செப். 11:  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் சாலை மறியல் நடந்தது. மாவட்டம்  முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைமையில் நாடு முழுவதும் நேற்று எதிர்க்கட்சிகள் இணைந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. காரைக்கால் மாவட்டத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள், வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதனால் அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. ஆட்டோ, வேன், லாரிகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஒரு சில தமிழக அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கியது. அதையும் நிறுத்துமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. அரசு பள்ளிகள், கல்லூரிகள் இயங்கியது. ஆனால் அவர்களுக்கான மாணவர்கள் இலவச பேருந்து, கல்லூரி பேருந்துகள் இயங்காததால் பெரிதும் அவதிப்பட்டனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 7,000 மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனையும் நடக்கவில்லை. நேரு மார்க்கெட்டு மூடப்பட்டிருந்தது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், தமுமுக, மமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தனித்தனியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய மறியலில்போது 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்