SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கொள்ளிடம் பகுதி பொதுமக்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் குறை கேட்பு

9/11/2018 12:43:46 AM

கொள்ளிடம், செப். 11:  கொள்ளிடம் அருகே முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, சந்தப்படுகை ஆகிய வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் குறைகளை கேட்டறிந்தார். நாதல்படுகையில் விவசாயிகளை சந்தித்தபோது அப்பகுதியில் 300 டீசல் இன்ஜின் மற்றும் பல மின்மோட்டார்கள் வெள்ளநீரில் மூழ்கியதால் பழுதாகிவிட்டன.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

அப்போது மேலதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிசங்கர் அய்யர் தெரிவித்தார். முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் படேல், எஸ்சிஎஸ்டி பிரிவு மாநில செயலாளர் ராமு, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜா, முன்னாள் சட்டமன்ற  தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பானுசேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

  • thirupathisixbrammorcha

    திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

  • german_trainhydro

    ஜெர்மனியில் சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் - பயணிகள் உற்சாக வரவேற்பு.!

  • spain_hotelaccident123

    ஸ்பெயினில் நட்சத்திர ஹோட்டல் கட்டுமானப் பணியின் போது விபத்து - ஒருவர் பலி

  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்