மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அரசு பள்ளி வளாகத்தில் திறந்தவெளியில் மரண கிணறு
9/11/2018 12:32:50 AM
செய்யூர், செப். 11: மணப்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறு இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அச்சத்துடன் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். சித்தாமூர் ஒன்றியம் மணப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போது 19 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பழமையான கிணறு ஒன்றுள்ளது. முன்பு ஒரு காலத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த அக்கிணறு அதன்பின் பொது மக்களுக்கு பயன்படாமல் போனது. தற்போது இக்கிணறு பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் திறந்தவெளியாக உள்ளது. பொதுமக்களுக்கு பயன்படாமல் உள்ள இந்த கிணற்றை தூர் வார வேண்டும். கிணற்றின் மீது தடுப்புகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுநாள் வரையில் அதற்கான நடவடிக்கையில் ஊராட்சி நிர்வாகமோ, ஒன்றிய நிர்வாகமோ ஈடுபடவில்லை என அப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கிணற்றால் எந்நேரமும் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து நேரிடும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அச்சத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் இப்பள்ளியின் நுழைவு பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பகுதி திறந்தவெளியாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் பள்ளியை சுற்றி சுவர் அமைத்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணற்றை தூர் வாரி மூடி போட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்
கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை
அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல் புகார் எதிரொலி நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது?: துணை இயக்குனர் நோட்டீஸ்
திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாப்பேட்டை கிராமத்தில் தனி வாக்குச்சாவடி மையம்: வாக்காளர்கள் வலியுறுத்தல்
திமுக பிரமுகர் கொலையில் திருவள்ளூர் கோர்ட்டில் மேலும் 5 பேர் சரண்
மூசிவாக்கத்தில் தனிநபர் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
காதலர் தின கொண்டாட்டம் : மாமல்லபுரத்தில் உற்சாகம்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு