SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்

9/11/2018 12:32:38 AM

காஞ்சிபுரம், செப்.11: வேளாண்மை பொறியியல் துறையின் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் 2018-19ம் நிதி ஆண்டில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்குதல் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் அமைத்தல் திட்டங்கள் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7.225 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35% முதல் 50% வரையிலும், இதர விவசாயிகளுக்கு 25% முதல் 40% வரையிலும் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாகவும், உயர் தொழில்நுட்ப, அதிக விலையுள்ள இயந்திரங்களுக்கு அதிக பட்சமாக 2 லட்சம் வரையும் மானியமாக வழங்கப்படும்.

அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்றிட விவசாயிகள், விவசாயக் குழுக்கள் அல்லது தொழில் முனைவோர் ஆகியோரால் அமைக்கப்படும் ₹.25 லட்சம் மதிப்புடைய வேளாண் இயந்திரங்கள் உள்ள வட்டார அளவிலான வாடகை மையங்களுக்கு 40%-ல் அதிகபட்சமாக 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற உழவன் செயலியில் தனது ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பம் மத்திய அரசின் இணையம் “www.agrimachinery.nic.in” ல் இணைக்கப்படும். வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரை சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் இலக்கு முடிவுற்ற பின்னர் அதே இயந்திரம் அல்லது கருவியை தேர்வு செய்தால் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவார். ஒரு நிதியாண்டில் 2 வேளாண் இயந்திரம் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் வாங்கிட இயலும்.

மேலும் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மானிய விலையில் வாங்கிட இயலும். மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு விவரங்கள் அறிய செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, காஞ்சிபுரம் (நந்தனம் இருப்பு) மற்றும் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, காஞ்சிபுரம், நந்தனம், மதுராந்தகம் அலுவலகங்களில் அணுகலாம் அல்லது மத்திய அரசின் இணையத்தளமான www.agrimachinery.nic.in-ன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்