SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரிக்கை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

9/11/2018 12:30:36 AM

பள்ளிப்பட்டு, செப். 11: ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை கேட்டு பொதுமக்கள் திடீர் என முற்றுகையிட்டனர். ஆர்.கே.பேட்டை ஊராட்சியில் செல்லாத்தூர் செல்லும் தார் காலனி பகுதிகளில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணியாளர் அட்டை வைத்துள்ளனர். மேற்கண்ட பகுதி மக்களுக்கு கடந்த ஒரு வருடமாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சரிவர பணி வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அப்பகுதி மக்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீர் என முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக ஆர்.கே.பேட்டை ஒன்றிய ஆணையர் பாபுவிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், தற்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி ஏற்கனவே செய்ததை போல் செய்யமுடியாது. நீர் நிலைகள், வாய்க்கால் வரப்புகள் ஆகியவற்றை சீர்செய்தல், விவசாய வேலை செய்தல் போன்ற பணிகள் தான் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து முறையாக அரசிடம் இருந்து அனுமதி வந்தவுடன் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்